Thursday, October 28, 2004

தமிழ்த்தாய் வாழ்த்து

நெருப்பெதுவோ..
புலனில் பொறியெதுவோ
புவியெதுவோ
புவிக்கும் பொதுவெதுவோ
புயலோ, மழையோ
என்றும் மறிக்காப் பொருளெதுவோ
மண் நோக்கும் விண்ணெதுவோ
மழலைச் சிரிப்பெதுவோ
தாயின் மடியெதுவோ
மடியில் உறங்கும் பொழுதெதுவோ
மடியாத விடியல்
மண்ணில் எதுவோ
மனம் விரும்பும் என்னவளின்
மைவிழியும் மறந்துவிட
பொய்மொழியும் வரிகளினால்
மெய் உருக்கும் உருவெதுவோ
என் உலகெதுவோ
அதுதான் இதமோ, உயிரோ
என வெளியில் வெறித்துப் பார்த்தேன்
என் உள்ளே சிரிக்கும் தமிழை
ஒரு நொடி மறந்த பொழுது!!

2 Comments:

Blogger Sudhakar said...

Jai... I could not understand it da. The tamizh translation is bad in this site it seems. I could not get a word out of it.

October 28, 2004 at 10:38 AM  
Blogger Sudhakar said...

Great macchi!!! I wondered why you kept the title as "Thamizh Thaai Vazhtthu" in the middle but when I finished reading it, I understood why. Keep posting.

October 28, 2004 at 3:17 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home